பகவத் கீதை வெண்பா ஏது முதல்விடம்போ லி னனாது பின்னதுதான் மீது வளர்ந்தமுத மேயொக்கு – மோதுமுயிர்ப் புந்தித் தெளிவுதரும் பொற்பார் சுகமதுதான் முந்தித் திகழ் குணத்தின் மொய்ம்பு. 18.37 அமர்விசையா போரிலே வெற்றியே பெறும் அர்ஜுனா! தான் அமர்ந்து சேர் சுகந்தான் மனிதன் பொருந்திச் சேரும் சுகமானது தன் குணத்தால் அவனிடமுள்ள ஸத்வம் ரஜஸ் தமஸ் ஆகிய மூன்று குணங்களில் எது மிகுதியாயிருக்கிறதோ அதையிட்டு மூன்று வகையானபடி மூன்று வகையாயிருப்பதை நீ கேள் நீ (என்னிடமிருந்து) கேட்பாயாக ஊனமற குற்றமில்லாதபடி எதனில் எந்த சுகத்தில் மிக்க சீலத்தால் மிகவும் பழகுவதால் (மனிதன்) மெய்யே உகப்பு எய்தி உண்மையான ஆனந்தத்தை அடைந்து துக்கமுடிவும் சூழ்ந்து செறியும் எல்லாத் துன்பங்களின் முடிவையும் அடைவானோ ஏது எந்த சுகமானது முதல் (யோகத்தைத்) தொடங்கும் காலத்தில் விடம்போல் இன்னாது (பழகாத ஆத்மவிஷயத்தில் மிகுந்த சிரமப்படவேண்டியிருக்கையால்) விஷத்தைப்போல் துன்பமளிக்கிறதோ பின் (யோகத்தின்) இறுதியில் அதுதான் அதுவே மீது வளர்ந்து அமுதமே ஒக்கும் (ஆத்ம ஸ்வரூபத்தை) மேன்மேலும் அனுபவிக்கையால் அமுதத்தை ஒத்திருக்குமோ ஓதும் உயிர் புந்தித் தெளிவுதரும் பொற்பார் சுகம் அதுதான் மற்ற விஷயங்களிலிருந்து நீங்கி ஆத்மாவையே அனுபவிக்கையால் உண்டானதான அந்தச் சுகம் முந்தித் திகழ் குணத்தின் மொய்ம்பு முதல் குணமான ஸத்வ குணத்தால் ஏற்பட்ட சிறந்த தன்மையாகும் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0