பகவத் கீதை வெண்பா

மூளும் பொறிபுலனான் முன்னமுதம் போலாகி
மீளும் பொழுதில் விடம்போலே- நாளுங்
கொடுநிரையத் தேவீழ்க்கக் கூட்டுஞ் சுகந்தா
னடுத்திகழு மக்குணத்தி னட்டி.         18.38

மூளும் பொறி புலனால்

(அன்னம் பானம் முதலான) விஷயங்களுக்கு இந்திரியங்களோடு சேர்த்தி ஏற்படுகையால்

முன்

(அந்த விஷயங்களை அனுபவிக்கும்) ஆரம்ப காலத்தில்

அமுதம் போல் ஆகி

அமுதம் போல் இருந்து

மீளும் பொழுதில்

(அதனுடைய பலனை அனுபவிக்கும்) கடைசிக்காலத்தில்

விடம் போலே

விஷத்தைப்போலே

நாளும்

இம்மையிலும் மறுமையிலும்

கொடு நிரையத்தே வீழ்க்கக் கூட்டும்

கொடுமையான துன்பத்தில் விழும்படியாகச் செய்து விடுகிற

சுகந்தான்

சுகமானது

நடுத்திகழும் அக்குணத்தின் நட்பு

முக்குணங்களின் நடுவிலுள்ள ரஜோகுணத்தின் சேர்த்தியால் உண்டானது.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top