பகவத் கீதை வெண்பா

தோன்றுழியிற் றுய்ப்பிற் றுளங்கா வுயிர்மயக்கி
யூன்றுறக்க முண்மடிவோர்ப் பின்மையா – லேன்றுவரு
மோகச் சுகமதுதான் முக்குணத்திற் பிற்குணத்த
தாகப் புகன்றா ரறிந்து.          18.39

தோன்றுழியில்

தொடக்கத்திலும்

துய்ப்பில்

நாளடைவில் அனுபவிக்கும்போதும்

துளங்கா உயிர்மயக்கி

அழிவற்ற ஆத்மாவுக்கு மயக்கத்தை விளைத்து

ஊன்று உறக்கம் உள்மடி ஓர்ப்பு இன்மையால் ஏன்று வரும் மோகச் சுகம் அதுதான்

மிகுதியான தூக்கம் மிக்க சோம்பல் கவனமின்மை ஆகியவற்றால் விளைவதாய் மயக்கத்தை விளைப்பதான அந்த ஸுகம்

முக்குணத்தில் பிற்குணத்ததாக

மூன்று குணங்களில் கடைசிக்குணமான தமோகுணத்தால் விளைவதாக

அறிந்து புகன்றார்

(அறிவாளிகள்) ஆராய்ந்து கூறினார்கள்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top