பகவத் கீதை வெண்பா ஏவனா னாவேனமற் றெவ்வளவி னுண்மையினா லாவனாங் கென்னை யறிவதுதான் – மேவநிகழ் பக்தியான் மெய்யுணர்ந்தே பண்பா லெனைப்பின்னை முத்தியால் வந்தடையு முற்று. 18.55 ஏவன் நான் ஆவேன் ஸ்வரூபத்தாலும் ஸ்வபாவத்தாலும் நான் எத்தகையவனோ மற்று மேலும் எவ்வளவின் ஆவன் குணத்தாலும் செல்வத்தாலும் நான் எப்படிப்பட்டவனோ ஆங்கு என்னை அத்தகைய என்னை மேவநிகழ் பத்தியான் முற்கூறிய பரபக்தியாலே உண்மையினால் அறிவதுதான் உள்ளபடி அறிகிறான் மெய் உணர்ந்தே உள்ளபடி அறிந்து பின்னை அதற்குப் பிறகு பண்பால் பரமபக்தியினாலே எனை என்னை முத்தியால் உற்று வந்தடையும் மோக்ஷநிலையில் பரிபூர்ணமாக வந்தடைவான். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0