பகவத் கீதை வெண்பா

பார்த்தனே நின்னொருமை பற்றியாஞ் சித்தத்தாற்
சீர்த்தவிது கேட்டுச் சிறந்தாயே – பேர்த்துன்னை
மோகத்தைச் செய்மாய முற்றுங் கழிந்ததே
யோகத்தைச் சேர்ப்பான் புணர்ந்து.          18.72

பார்த்தனே

குந்தீபுத்திரனே!

நின் ஒருமை பற்றி ஆம் சித்தத்தால்

உன்னுடைய ஒருமுகப்பட்ட மனத்தாலே

சீர்த்த இது கேட்டு

சிறப்பு மிக்க இந்த சாஸ்திரத்தைக் கேட்டு

யோகத்தைச் சேர்ப்பான் புணர்ந்து

கர்மயோகமாகிற யுத்தத்தைச் செய்யவேண்டுமென்று இசைந்து

சிறந்தாயே

சிறப்படைந்தாயா?

உன்னை பேர்த்து

வீரனான உன்னை முற்றிலும் மாற்றி

மோகத்தைச் செய் மாயம்

மோகத்தைச் செய் மாயம்

முற்றும் கழிந்ததே

முழுவதும் நீங்கிற்றா?

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top