பகவத் கீதை வெண்பா

என்றிறையோன் சொல்ல வெழில்விசையன் செப்பினா
னின்றியலு மோகம்போ யேய்ந்துமதி – நின்றுநா
னுன்னருளி னான்மயக்க மொன்றின்றிச் சென்றியல்வன்
சொன்னதெல்லாஞ் செய்வன் றுணிந்து.          18.73

என்று இறையோன் சொல்ல

இவ்வண்ணமாகக் கண்ணன் அருளிச்செய்ய

எழில் விசையன்

அழகிய அர்ஜுனன்

செப்பினான்

பின்வருமாறு கூறினான்

உன் அருளினால்

உன்னுடைய அருளாலே

நின்று இயலும் மோகம் போய்

இவ்வளவு காலம் நிலையாக இருந்த மயக்கம் நீங்கப்பெற்று

மதி ஏய்ந்து நின்று

அறிவு பொருந்தப்பெற்று

நான்

நான்

மயக்கம் ஒன்று இன்றிச் சென்று இயல்வன்

ஐயம் ஒன்றும் இல்லாமல் நிலையாயிருக்கிறேன்

சொன்னதெல்லாம்

நீ சொன்னது அனைத்தும்

துணிந்து செய்வன்

உறுதியுடன் செய்வேன்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top