பகவத் கீதை வெண்பா எவ்விடத்தான் யோகத்துக் கீசனாங் கண்ணன்றான் எவ்விடத்தான் வில்லேந் தெழில் விசைய – னவ்விடத்தே வாய்ந்த திருவிசையம் வாழ்வுவள நீதிதிட மேய்ந்தனவென் றேமதிப்பன யான். 18.78 யோகத்துக்கு ஈசனாம் கண்ணன்தான் எவ்விடத்தான் சிறப்புக்கள் அனைத்தையும் ஆள்பவனான கண்ணன் எவ்விடத்திலிருக்கிறானோ வில் ஏந்து எழில் விசையன் எவ்விடத்தான் வில்லை ஏந்திய அழகிய அர்ஜுனன் எவ்விடத்தில் இருக்கிறானோ அவ்விடத்தே அந்த இடத்திலேயே வாய்ந்த திரு பொருந்தி நிற்கும் செல்வம் விசையம் வெற்றி வாழ்வு வளம் வாழ்க்கை நலன்கள் நீதி தர்மம் (ஆகியவை) திடம் ஏய்ந்தன உறுதியாகப்பொருந்தி நிற்கின்றன என்றே என்றே யான் மதிப்பன் நான் எண்ணுகிறேன். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0