பகவத் கீதை

अश्वत्थः सर्ववृक्षाणां देवर्षीणां च नारदः ।
गन्धर्वाणां चित्ररथः सिद्धानां कपिलो मुनिः ॥ २६ ॥
அச்வத்த: ஸர்வவ்ருக்ஷாணாம் தேவர்ஷீணாஞ்ச நாரத: |
கந்தர்வாணாம் சித்ரரத: ஸித்தாநாம் கபிலோ முநி: ||     10.26

பன்னிரெண்டு சூரியர்களுக்குள் உயர்ந்த விஷ்ணு நான். ஒளிவிடும் பொருள்களில் அதிகமாக ஒளிரும் சூரியன் நான். நாற்பத்தொன்பது வாயுக்களுள் மரீசியாகவும், நக்ஷத்திரங்களுக்குள் சந்திரனாகவும் விளங்குகிறேன்.

வேதங்களுக்குள் ஸாம வேதமாகவும், தேவதைகளுக்குள் இந்திரனாகவும், புலன்களுக்குள் மனிதனாகவும், பிராணிகளின் அறிவாகவும் அமைகிறேன்.

பதினோரு ருத்ரர்களுக்குள் சங்கரனாகவும், யக்ஷ ராக்ஷஸர்களுக்குள் குபேரனாகவும், எட்டு வசுக்களில் பாவகனாகவும், மலைகளுக்குள் மேருவாகவும் நான் இருக்கிறேன்.

அர்ஜுன! புரோஹிதர்களுக்கு ப்ருஹஸ்பதியாகவும், சேனாதிபதிகளில் சுப்ரமன்யணாகவும், தண்ணீர் தங்கும் இடங்களில் சமுத்திரமாகவும், என்னை நீ அறிவாயாக!

நான் மஹரிஷிகளில் பிருகு. வார்த்தைகளில் ஒரு எழுத்துள்ள பிரணவம், யாகங்களில் ஜப யாகம். மலைகளில் ஹிமயம்.

மரங்களுக்குள் அரசமரம், தேவர்களில் நாரதர், கந்தர்வர்களில் சித்ரரதன், சித்தர்களில் கபிலன்.

குதிரைகளில் உச்சைச்சிரவஸ், யானைகளில் ஐராவதமாகவும், மனிதர்களில் அரசன் என்றும் அறிவாயாக.

ஆயுதங்களில் வஜ்ராயுதம், பசுக்களில் காமதேனு, ப்ரஜைகள் பிறக்கக் காரணமான மன்மதன், பாம்புகளில் வாசுகியாகவும் ஆகிறேன்.

நாகங்களில் ஆதிசேஷன், நீர் உயிர்களில் வருணன், பித்ருதேவதைகளில் அர்யமா, தண்டிப்பதில் யமனாகவும், நான் இருக்கிறேன்.

அசுரர்களில் பிரஹலாதன், ஆயுளைக் கணக்கிடுவதில் காலம், மிருகங்களில் சிங்கம், பறவைகளில் கருடனாக உளேன்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top