பகவத் கீதை

यो मामजमनादिं च वेत्ति लोकमहेश्वरम् ।
असंमूढः स मर्त्येषु सर्वपापैः प्रमुच्यते ॥ ३ ॥
யோ மாமஜம் அநாதிஞ்ச வேத்தி லோகமஹேச்வரம் |
அஸம்மூட: ஸ மர்த்யேஷு ஸர்வபாபை: ப்ரமுச்யதே ||     10.3

எவன் ஒருவன் என்னை ஒப்புயர்வு அற்றவனாகவும், அநாதியானவனாகவும், பிறப்பில்லாதவனாகவும், உலகுக்கெல்லாம் ஸ்வாமி என்றும் அறிகிறானோ, அவன் தன் பாபங்களின்றும் விடுபடுகிறான்.

பகவான் அசேதனங்களைப் போல் மாறுதல் இல்லாதவன், சேதனர்களைப் போல் கர்மத்தினால் பிறவாதவன், முக்தர்களைப் போல சில காலம் பூலோகத்திலிருந்து மோக்ஷ அடைபவனு மல்லன். இப்படி சேதன அசேதன முக்தர்களிலிருந்து வேறு பட்டவன் (விலக்ஷணன்) அவர்களைவிட மேலானவன், புருஷோத்தமன், நித்யன் அதாவது அழிவில்லாதவன், ஒருவித தோஷமும் தட்டாதவன், கல்யாண குணக் கடல், இப்படி அவனை அறிந்தால் பக்திக்குத் தடையான நம் பாபங்கள் விலகி, நமக்கு பக்தி உண்டாகும்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top