அர்ஜுன! எந்தெந்த ஜீவன் என் விபூதியில் சிலவற்றை, தனக்குச் சிறப்பாகக் கொண்டோ, மற்றும் செல்வம், நல்லறிவு, நற்செயல் இவைகளை உடையேதா, அவை யெல்லாம் என் ஆற்றலின் அற்பப்பகுதியில் அவைகளுக்கு என்னால் கொடுக்கப்பட்டன. உலகில் சிலர் மற்றவர்களை விட செல்வத்தினாலும், அறிவு ஆற்றலினாலும் சிறந்தவர் களாய் இருப்பது என் நியமன சக்தியின் ஒரு சிறு பகுதியினாலேயே என்பதை நீ அறிவாயாக. உலகில் எல்லோருக்குமுள்ள அறிவு, ஆற்றல் எல்லாம் பகவானாலே கொடுக்கப்பட்டவைகளே.