குருகுலப் போர் வீரா! மனித உலகில் என் பக்தானான உன்னைத் தவிர, வேறு யாவராலும், வேதம் ஓதி அறிவதாலும், யக்ஞம் யாகம், தானம், உக்கிரமான தபஸ் இவைகளினாலும், என் இந்த விச்வரூபத்தைக் காண முடியாது. பகவானை அடைவதற்கு அவன் அருளே உபாயமே ஒழிய மற்றவை எதுவும் உபாயமாகாது என்பது தேறுகிறது.