எங்கும் பரந்த விஷ்ணுவே! வான் அளாவி பல நிறங்களுடன் பிரகாசிக்கின்ற, திறந்த வாய்களையுடைய, ஒளிவீசும் அகன்ற கண்களையுடைய உம்மைக் கண்டு, மிக்க அச்சமுற்றவனான நான் தைரியத்தையும் மன அமைதியையும் இழந்து விட்டேன். என் உடல் பதறுகிறது. கண்களை மூடிக் கொண்டாலும் எனக்குப் பயமாகவேயிருக்கிறது.