பகவத் கீதை

इत्यर्जुनं वासुदेवस्तथोक्त्वा स्वकं रूपं दर्शयामास भूयः ।
आश्वासयामास च भीतमेनं भूत्वा पुनः सौम्यवपुर्महात्मा ॥ ५०॥
ஸஞ்சய உவாச -ஸஞ்சயன் கூறியது:
இத்யர்ஜுநம் வாஸுதேவஸ் ததோக்த்வா ஸ்வகம் ரூபம் தர்சயாமாஸ பூய: |
ஆச்வாஸயாமாஸ ச பீதமேநம் பூத்வா புந: ஸெளம்யவபுர் மஹாத்மா ||     11.50

பகவான் அர்ஜுனனைப் பார்த்து இவ்வாறு கூறி, ஸத்ய ஸங்கல்பனாகையினால் தான் சொன்னபடியே முன்பு இருந்த கிரீடம் சங்கு சக்கரம் நான்கு கைகளுடன் கூடிய தன் கிருஷ்ண உருவத்தை அர்ஜூனனுக்குக் காட்டி, அவன் பயத்தையும் போக்கினான்.

கிருஷ்ணன் அவதரிக்கும்போது, சதுர் புஜங்களுடனேயே அவதரித்திருக்கிறான். வசுதேவர் கேட்டுக் கொண்டபடி அதை இரண்டு கைகளாக மாற்றிக் கொண்டான். கம்ஸவதம் வரையில். அதற்குப் பிறகு நான்கு கைகளுடனேயே இருந்ததாகத் தெரிய வருகிறது. சிசுபாலன் கண்ணனை நான்கு கைகளுடையவனாகவே கூறியுள்ளான். இங்கே அர்ஜுனனும் "தேனவை ரூபேண சதுர்புஜேன" என்று கூறியிருக்கிறான்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top