அர்ஜூன! என் ஓர் உருவத்தில் பன்னிரு ஆதித்யர்களையும், எட்டு வசுக்களையும், பதினோரு ருத்ரர்களையும், இரண்டு அச்வினி தேவதைகளையும், நாற்பத்தொன்பது மருத்கணங்களையும் பார் இன்னும் இவ்வுலகில் எவை எவை காணப்படுகின்றனவோ, சாஸ்திரங்களில் என்ன என்ன சொல்லப்பட்டிருக்கின்றனவோ, மற்றும் இதற்கு முன் நீ காணாதவைகள் எல்லாம், என் விச்வரூபத்தில் காண்பாய்.