எவனிடமிருந்து உலகம் பயப்படுகிறதில்லையோ, உலகினால் எவனுக்கு ஒருவித பயமுமில்லையோ, எவன் களிப்பு, சினம், அச்சம், கலக்கம் இவைகளிலிருந்து விடுபட்டவனோ, அவன் எனக்குப் பிரியனாகிறான்.
அந்த கர்மயோகி உலகிலுள்ள எந்த உயிர்களுக்கும் ஒரு கெடுதலும் செய்யான்; ஆதலால் இவனிடமிருந்து உலகுக்குப் பயமில்லை. அதேபோல உலகிலுள்ள எதிலும் இவனுக்கு விருப்பமோ, வெறுப்போ யில்லாததினால், எல்லா உயிர்களிலிருந்தும், இவனுக்கு பயமேதும் இராது. இவன் உலகத்தில் ஒட்டற்று வசிப்பவனாகையினால் சந்தோஷமோ துக்கமோ, மற்றும் கோபம், பயம், கலக்கம் முதலியவை இவனுக்கு உண்டாகக் காரணமேயில்லை.