श्रीभगवानुवाच –
मय्यावेश्य मनो ये मां नित्ययुक्ता उपासते ।
श्रद्धया परयोपेतास्ते मे युक्ततमा मताः ॥ २॥
ஸ்ரீ பகவான் உவாச மய்யாவேச்ய மநோ யே மாம் நித்ய யுக்தா உபாஸதே | ச்ரத்தயா பரயோபேதா: தே மே யுக்ததமா மதா: || 12.2
பகவான் கூறியது.
அர்ஜூன! எவர்கள் என்னிடம் அளவில்லா அன்பைச் செய்து தங்கள் மனத்தை என்னிடமே வைத்து, என்னை அடைய வேண்டும் என்று ஊக்கத்துடன் என்னை உபாசிக்கிறார்களோ, அதாவது பக்தி செய்கிறார்களோ, அவர்களே சிறந்தவர் என்பது எனது கருத்து, என்றான் கண்ணன்.