பகவத் கீதை

समं सर्वेषु भूतेषु तिष्ठन्तं परमेश्वरम् ।
विनश्यत्स्व विनश्यन्तं यः पश्यति स पश्यति ॥ १३.२८ ||

ஸமம் ஸர்வேஷு பூதேஷு திஷ்ட்டந்தம் பரமேச்வரம் |
விநச்யத்ஸ்வ விநச்யந்தம் ய: பச்யதி ஸ பச்யதி ||        13.28

எல்லா உடல்களிலும் உள்ள ஜீவாத்மாக்கள் ஸமமானவை; ஒன்றைப் போலவே மற்றவை எல்லாம் உள்ளவை. சரீரம் அழியும் போதும், ஜீவன் அழிகிறதில்லை; பல அவயவக் கூட்டங்களாலான உடலுக்கு, ஜீவனே எஜமானன்; ஈச்வரன். இவைகளை எல்லாம் எவன் அறிகிறானோ, அவனே ஜீவாத்மாவை உள்ளபடி அறிந்தவனாகிறான்.

பரமேசுவரன் என்கிற பதம் பகவானையே சொல்லும். இருந்தாலும், இங்கே பல அவயவக் கூட்டங்களுடன் கூடிய உடலுக்கு ஜீவன் எஜமானனாக யிருப்பதைப்பற்றி அவனை போஷித்து பரமேசுவரன் என்கிறான்.

ஸர்வேஷு பூதேஷு ஸமதிஷ்டந்தம் – தேவ மனித மிருக, ஸ்தாவர உடல்கள் அனைத்திலும் உள்ள ஜீவாத்மாக்கள் ஒரே மாதிரியானவை. "கவாம் அநேக வர்ணானாம் க்ஷீராம்ஸ்து ஏக வர்ணானாம்” பல வர்ணங்களையுடைய பசுக்கள் தரும் பால், ஒரே வர்ணமாக, வெண்மையாகயிருப்பது போல, சரீரம் வேறுபட்டிருந்தாலும், அவைகளிலுள்ள ஜீவன் ஒரே மாதிரியிருப்பவன். மரக்கட்டையை உப்பளத்தில் போட்டு வைத்தால், அது உப்பாகவே மாறிவிடுவது போல, சரீரத்திலுள்ள ஜீவன் மாறுதலடைவதில்லை. கங்கா தீர்த்தத்தை ஒரு செப்பினாலான பாத்திரத்தில் வைத்திருந்தாலும், அந்த கங்கா தீர்த்தம் பரிசுத்தமாகவேயிருக்கும். அதுபோல ஜீவன் பரிசுத்தனாகவேயிருக்கிறான்.

ய பச்யதி ஸ பச்யதி - இப்படி ஜீவனை அறிபவனே அவனை உள்ள படி அறிந்தவனாகிறான்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top