பகவத் கீதை

பதிமூன்றாம் அத்யாயம்-க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞ விபாகயோகம்

अर्जुन उवाच:-
प्रकृतिं पुरुषं चैव क्षेत्रं क्षेत्रज्ञमेव च ।
एतद्वेदितुमिच्छामि ज्ञानं ज्ञेयं च केशव ॥ १३.१ ॥

அர்ஜுன உவாச:-
ப்ரகிருதிம் புருஷம் சைவ க்ஷேத்ர க்ஷேத1ரஞ்ஞமேவ ச |
ஏதத்3வேதி3துமிச்சா2மி ஞானம் ஞேயம் ச கேஶவ ||        13.1

மூன்றாம் ஷட்கம், பதின்மூன்றாம் அத்தியாயம், அவதாரிகை

ஸ்ரீ ய: பதியான ஸர்வேஶ்வரனே கிருஷ்ணனாய், அவதரித்து நமக்குக் கீதா சாஸ்திரத்தை உபகரித்தருளியிருக்கிறான்.

"யச் ச்ரேய :ஸ்யாந் நிச்சிதம் ப்ரூஹி தந் மே" என்று அர்ஜூனன் கிருஷ்ணனை முதன்முதல் பிரார்த்தித்திருக்கிறான். அதன்படியே கண்ணன், ஒரு ஜீவனுக்கு, எது ச்ரேயஸ்கரமோ எது உயர்ந்து ஆத்ம நன்மையைத் தரக்கூடியதோ அதையே உபதேசித்திருக்கிறான். மனிதப் பிறவி எடுத்த ஒரு ஜீவாத்மாவுக்கு மறுபிறவி யில்லாத மோக்ஷம் பெற்று அங்கு பகவானுக்குத் தொண்டு புரிந்து வாழ்வதே மேலான பயன். இதைப் பெற பக்தியே ஸாதனம் - உபாயம்- என்பதே கீதையில் ஸாரமாக கிருஷ்ணனால் உபதேசிக்கப்பட்டுள்ளது

உயர்ந்தவனிடம் தாழ்ந்தவன் செய்யும் அன்பே பக்தி எனப்படும். ஆதலால் முதல் ஷட்கத்தில் தாழ்ந்தவனான ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தையும், பக்திக்கு அங்கமான கர்மயோக ஜ்ஞான யோகத்தையும் விரிவாக உபதேசம் செய்தான்.

இரண்டாம் ஷட்கத்தில் உயர்ந்தவனான பகவானின் சிறப்பை யெல்லாம் சொல்லி, தன்னிடம் பக்தி செய்யும் விதத்தையும், அப்படி பக்தி செய்பவன் தன்னையே அடைகிறான்; இவனுக்கு மறுபிறவியில்லை என்று பக்தியின் பலனையும் சொல்லி, கீதை உபதேசத்தைப் பன்னிரெண்டாம் அத்தியாயத்துடன் முடித்துக் கொண்டான் கண்ணன்.

ஆனால் இத்துடன் தன் உபதேசத்தை நிறுத்திக் கொள்வதில் அவனுக்குப் பிரியமில்லை, கீழே பன்னிரெண்டு அத்தியாயங்களிலும் சொன்னவைகளையே மறுபடியும் விவரிக்கிறான் இந்த மூன்றாம் ஷட்கத்தில், இதுவன்றோ ஒரு ஸதாசாரியனின் தன்மை!

முதலில் இந்த, பதின்மூன்றாம் அத்தியாயத்தில் உடல், உயிர் இவைகளின் தன்மையையும், இவ்விரண்டின் சேர்க்கையினாலேயே உலகம் யாவையும் உண்டாயிருக்கின்றன வென்றும் இச்சேர்க்கைக்கு காரணத்தையும் விவரிக்கிறான்.

ஸ்லோகத்தின் பொருள்:

குந்தி புத்திரனே! இந்த உடல் க்ஷேத்ரம் எனப்படும். இதை அறியும் ஜீவாத்மா க்ஷேத்ரஜ்ஞன் எனப்படுபவன். சிறந்த அறிவுடைய ஜ்ஞானிகள் இப்படி கூறுவர்.

பல அவயவங்களுடன் கண்களால் காணப்படும் இந்த உடல் க்ஷேத்ரம் எனப்படும். இந்த உடலினுள் இருக்கும் ஜீவன், இவ்வுடலை அறிந்து அதை தரிக்கிறான். இவன் க்ஷேத்திரஞ்ஜன் எனப்படுவான். அறிவுடையோர் இவ்வாறு பகர்வர். உடல் வேறு உயிர் வேறு என்பதைக் கூறுகிறான்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top