பகவத் கீதை

प्रकृत्यैव च कर्माणि क्रियमाणानि सर्वशः ।
यः पश्यति तथात्मानमकर्तारं स पश्यति ॥ १३.३० ॥

ப்ரக்ருத்யைவ ச கர்மாணி க்ரியமாணாநி ஸர்வச: |
ய: பச்யதி தத் ஆத்மானம் அகர்த்தாரம் ஸ பச்யதி ||       13.30

எல்லாச் செயல்களும் உடலினாலேயே செய்யப்படுகின்றன. ஜீவன் தானாக எதையும் செய்யவில்லை என்பதை எவன் அறிகிறானோ, அவன் ஆத்மாவை உள்ளபடி அறிந்தவனாகிறான். எல்லாச் செயல்களும் ப்ரக்ருதியினாலேயே நடைபெறுகின்றன. ஜீவன் எதையும் செய்பவனில்லை என்கிற சாங்கிய மதக் கொள்கையே இங்கு கண்ணன் கூறுவதாகத் தோன்றும். வியாஸர் உள்பட எல்லா ஆசார்யர்களும், கர்த்ருத்வம், செய்கை ஜீவனுக்கே உள்ள தர்மம், அசித்தான ப்ரக்ருதிக்கில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்கள்; இவைகளுக்கு மாறாக கண்ணன் இங்கு செய்கையை அறிவில்லாத ப்ரக்ருதிக்கே உள்ளது என்று கூறுவது எப்படிப் பொருந்தும்?

அறிவேயில்லாத உடல், புலன்கள் தாங்களாகவோ ஒருவரால் ஏவப்பட்டோ ஒரு செயலைச் செய்வது என்பது முடியாது. ஓர் உயிர் நீங்கிய உடல் ஒன்றும் செய்ய முடியாததன்றோ! ஜீவனுக்குத் தான் சித்சக்தி, அறியும் சக்தியும், செயல்படும் சக்தியும் பகவானால் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சக்திகளைக் கொண்டு ஜீவாத்மாவே உடலின் புலன்கள் மூலம் எல்லாச் செயல்களையும் செய்விக்கிறான். ஜ்ஞானாதி, இச்சதி, புங்தே, (அறிதல், விரும்புதல், அனுபவித்தல்) இம் மூன்றும் ஜீவன் நேருக்கு நேராகத் தானே செய்கிறான். (யததே, கரோதி, முயலுதல் செய்தல் (அடைதல்) போன்றவைகள் புலன்களின் மூலம் ஜீவனே செய்விக்கிறான். இது தான் தத்வம் (உண்மை).

இதையே கண்ணன் இந்த சுலோகத்தில், எல்லாச் செயல்களும் உடலின் புலன்கள் மூலம் நடைபெறுகின்றன; ஜீவன் தானாகவே செய்வதில்லை என்பதை அறிந்தவன் ஆத்ம நன்மையை அடைகிறான் என்கிறான்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top