பகவத் கீதை

क्षेत्रक्षेत्रज्ञयोरेवमन्तरं ज्ञानचक्षुषा ।
भूतप्रकृतिमोक्षं च ये विदुर्यान्ति ते परम् । १३.३५ ॥

க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞயோரேவம் அந்தரம் ஜ்ஞான சக்ஷஷா |
பூத ப்ரக்ருதி மோக்ஷஞ்ச யே விதுர் யாந்திதே பரம் ||        13.35

இவ்வாறு ஜீவாத்மா சரீரத்தை விட வேறுபட்டது என்பதை உள்ளபடி அறிந்து, அமரத்துவம், முதலான குணங்களைப் பெற்றவர்கள் ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுபட்டு, பரிசுத்த ஜீவனையை அடைகிறார்கள். மோக்ஷமடைகிறார்கள்.

சூரியன் ஆகாஸத்திலிருக்கிறான். உலக முழுவதும் தன் கிரணங்களால் பிரகாசிக்கிறான். அது போல ஜீவன் அதி நுண்ணியதாய் அணுவாய் உடலின் இருதயத்திலிருக்கிறான். தன்னுடைய ஜ்ஞான (அறிவு) ஒளியினால் பத்த தசையில் தன் உடல் முழுவதும், மாத்திரம் பிரகாஸித்துக் கொண்டிருக்கிறான். ஆனால் முக்த தசையில், அமர உடல் பெற்று, அவனுடைய ஞான ஒளி எங்கும் பிரகாசிக்கக் கூடியதாயிருக்கும்.

ஸ்ரீ ஆளவந்தார் அருளிய கீதார்த்த ஸங்க்ரஹம்

देहस्वरूपमात्मा प्तिहेतुगत्म विशोधनम् ।
बन्धहेतुर्विवेकश्च त्रयोदश उदीयेते ।। १७ ।।

தேஹ ஸ்வரூபம் ஆத்மப் ராப்தி ஹேது: ஆத்ம விசோதனம் |
பந்த ஹேது: விவேகச்ச த்ரயோதச உதீர்யதே ||

உடலின் ஸ்வரூபமும், ஆத்மதரிசனம் பெற உபாயமான அமானித்வம் முதலான குணங்களும், பத்த தசை, முக்த தசை இரண்டிலும் ஜீவாத்மாவின் தன்மையும், ஸம்ஸார பந்தத்திற்கு காரணமும், அதிலிருந்து விடுபட்டு பரிசுத்த ஆத்மாவை அடையும் வழியையும், இந்த பதின்மூன்றாவது அத்யாயத்தில் சொல்லப் பட்டது.

ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்!

பதிமூன்றாம் அத்யாயம்-க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞ விபாகயோகம் முற்றிற்று.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top