பகவத் கீதை

इच्छा द्वेषः सुखं दुःखं संघातश्चेतना धृतिः ।
एतत्क्षेत्रं समासेन सविकारमुदाहृतम् ॥ १३.७ 13.7 ॥

இச்சாத்வேஷ ஸுகம் துக்கம் ஸங்காதஸ் சேதனாத்ருதி: |
ஏதத் க்ஷேத்ரம் ஸமாஸேந ஸவிகாரம் உதாஹ்ருதம் ||        13.7

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம் என்கிற பஞ்சபூதங்களும் அஹங்காரம், புத்தி, மஹத், அவ்யக்தம், ப்ரக்ருதி என ஐந்தும் இந்த உடல் உண்டாகக் காரணமாகும்.

கண், மூக்கு, காது, நாக்கு, சருமம் (தோல்) இவ்வைந்து ஜ்ஞானேந்த்ரியங்களும், கை, கால், வாய், அபானம், உதானம் ஆகிய ஐந்து கர்மேந்த்ரியங்களும், மனம் ஒன்றும் ஆகிய பதினோரு புலன்களும் உடலைச் சார்ந்து இருக்கின்றன.

சப்தம் (ஒலி), ஸபர்சம் (ஊறு), ரூபம் (வடிவம்), ரஸம் (சுவை), கந்தம் (மணம்) இவ்வைந்தும் அந்தந்த புலன்களால் அனுபவிக்கப் படுகின்றவை.

சுகம், துக்கம் விருப்பம் வெறுப்பு, இவை இவ்வுடலுக்குண்டாகும் விகாரங்கள்.

அஹங்காரம் - என்றால் நான் எனது என்கிற உணர்ச்சி; புத்தி- நிச்சய அறிவு; அவ்யக்தம் - கண்ணுக்குப் புலப்படாத மூலப்ரக்ருதி

மேலே சொன்ன புலன்களும், குணங்களும், அவற்றுள் மாறுதலும் உடலுக்கே உள்ளவை. ஜீவாத்மாவுக்கு இவை எதுவும் கிடையாது. இப்படிப்பட்ட உடலில் ஜீவனிருக்கிறான். உடலுக்குண்டான குணங்களையும் மாறுதல்களையுமே நாம் ஜீவாத்மாவுக்கு விவரிக்கிறோம். உடலைப் பற்றியே நமக்கு ருசியும் வாஸனையும் ஏற்படுகிறது. ஒரு ஒட்டகத்தின் சரீரத்திலுள்ள ஜீவனுக்கு வேப்பிலை ருசிக்கிறது; அந்த வேப்பிலை நமக்கு கைக்கிறது; உடலின் குணமாறுதலினாலே ஒருவனுக்கு இன்று பிடித்த வஸ்து, நாளை பிடித்தமில்லை; இதெல்லாம் முற்பிறவி, கர்ம பலனை அனுபவிப்பதற்காகவே ஜீவன் ஒரு சரீரத்தைப் பெறுகிறான். அக்கர்ம பலன் அனுபவித்து தீர்ந்த உடன், சட்டி சுட்டதும் கைவிட்டதும்" என்பது போல அந்த உடலைவிட்டு ஜீவன் வெளியேறுகிறான்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top