பகவத் கீதை

उत्क्रामन्तं स्थितं वापि भुञ्जानं वा गुणान्वितम् ।
विमूढा नानुपश्यन्ति पश्यन्ति ज्ञानचक्षुषः ॥ १५.१० ॥

உத்க்ராமந்தம் ஸ்த்திதம் வாபி புஞ்ஜாநம் வா குணாந்விதம் |
விமூட நாநுபச்யந்தி பச்யந்தி ஜ்ஞான ஞானசக்ஷுஷ: ||         15.10

இந்த ஜீவன், மனம், கண், காது, மூக்கு, நா, தோல், முதலிய இந்த்ரியங்களை ஏவி, அவைகளின் மூலம் விஷயங்களில் தொடர்பு கொண்டு, அவைகளை அனுபபிக்கிறான்.

இச்சரீரம் ஸத்வ ரஜஸ் தமோ குணங்களை உடையது; இவைகளினால் உண்டாகும் விஷயங்களை அனுபவிக்கிறவன் ஜீவன். இப்படி சில காலம் அனுபவித்திருந்து, அந்த உடலை விட்டு வெளியேறுகிறான். இதை மூடர்கள் அறிகிறதில்லை. ஜ்ஞானிகளே அறிவர்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top