பகவத் கீதை

यो मामेवमसंमूढो जानाति पुरुषोत्तमम् ।
स सर्वविद्भजति मां सर्वभावेन भारत ॥ १५.१९ ॥

யோ மாமேவமஸம்மூடோ ஜாநாதி புருஷோத்தமம் |
ஸ ஸர்வவித் பஜதி மாம் ஸர்வபாவேந பாரத ||        15.19

அர்ஜூன! புருஷோத்தமனான என்னை எவன் இவ்வாறு தெளிய அறிகிறானோ, அவன் என்னிடம் எல்லாப்படியாலும் பக்தி செய்தவனாகிறான்.

மேலே கூறியபடி மற்ற எல்லோரைக் காட்டிலும் வேறுபட்டவனாய், மேன்பட்டடனாய், அவரவர் வேண்டிய பலனைக் கொடுக்கும் சிறப்புடையவனாய், எவன் என்னை அறிகிறானோ அவன் என்னை எல்லாப்படியாலும் ஆராதித்தவனாகிறான். சிறந்த ஜ்ஞானிக்கு என்னிடம் அன்பு, மிகுந்திருக்கும். எனக்கும் அவனிடம் அன்பு உண்டு. அவனுக்கு மறுபிறவியில்லை மோக்ஷம் அடைகிறான்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top