பகவத் கீதை

सर्वस्य चाहं हृदि संनिविष्टो मत्तः स्मृतिर्ज्ञानमपोहनं च ।
वेदैश्च सर्वेरहमेव वेद्यो वेदान्तकृद्वेदविदेव चाहम् ॥ १५.१५ ॥

ஸர்வஸ்யச அஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ மத்த: ஸ்ம்ருதிர் ஜ்ஞானம் அபோஹநஞ்ச |
வேதைஸ்ச சர்வை: அஹமேவ வேத்ய: வேதாந்த க்ருத் வேத விதேவ சாஹம் ||        15.15

எல்லோருடைய உள்ளத்தில் இருப்பவன் நான். ஜீவனின் நினைவு, மறதி, அறிவு ஆகியவை என் அதீனம். வேதங்களால் அறியப்படுபவனும் நானே. வேதங்களை நன்றாக அறிந்தவனும் நானே! அவைகளில் சொல்லப்படும் பலன்களைக் கொடுப்பவனும் நான்தான்; (புலன்களினாலும், போகம், சாஸ்திரம் இவைகளைக் கொண்டும். ஏற்படும் ஞானமே அறிவு : முன் நடந்தவைகளைப் பற்றிய அறிவு நினைவு; அறிவு இருந்தும் அது மனத்தில் தோன்றாமை மறதி).

இதற்கு மேல் மூன்று சுலோகங்களினால் புருஷோத்தம வித்யை புருஷோத்தமனான பகவானின் மேன்மையைச் சொல்லுகிறான்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top