பகவத் கீதை

न तद्भासयते सूर्यो न शशाङ्को न पावकः ।
यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम ॥ १५.६ ॥

ந தத் பாஸயதே ஸூர்யோ ந சசாங்கோ ந பாவக: |
யத் கத்வா ந நிவர்த்தந்தே தத்தாம பரமம் மம ||        15.6

அந்த ஜ்யோதியான ஜீவனை, சூர்யனோ, சந்திரனோ, அக்னியோ எதுவும் பிரகாசப்படுத்தாது. எதை அடைந்தால் திரும்பி வருவதில்லையோ, அந்த ஜ்யோதியான பரிசுத்த ஆத்மா என் அதீனம்.

சூரிய ஒளியோ, தீபத்தின் ஒளியோ புற இருளைப் போக்குமே ஒழிய, ஒரு வஸ்துவை உள்ளபடி அறிவது என்பது ஜீவாத்மாவின் ஞான ஒளியினால்தான். ஒரு குருடன் தன் கையினால் தடவி, ஒரு தூணைத் தூண் என்று தன் ஞான ஒளியினால் அறிகிறான்.

இப்படி ஞான ஸ்வரூபமாகவும், ஞானத்தை குணமாகவும் உடையவன் ஜீவன்.

பகவானைச் சரணம் பற்றுகிறவன் ப்ரக்ருதியினாலான முக்குணங்களைக் கடந்து ஜ்ஞான யோகம் செய்து, பரிசுத்த ஜீவனை அடைகிறான். அந்த ஜீவாத்ம அனுபவத்திலிருந்து திரும்புவகில்லை; இப்படிப்பட்டக் கைவல்யனும் எனக்கு சேஷன், என் அதீனம், அதாவது என் ஆணைக்குட்பட்டவன்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top