சரீரத்தின் எஜமானன் ஜீவன், ஒரு சரீரத்தை அடைந்து, சில காலம் அதில் வசித்து, பிறகு அதை விட்டு வெளிச் செல்லுகிறான்.
ஒரு மலர்த்தோட்டத்தில் வீசும் காற்று, மலர்களின் மணத்தை, தன்னுடன் இழுத்துச் செல்வது போல, ஜீவன் சில காலம் தானிருக்கும் உடலை விட்டு ஏகும் போது, தன்னுடன் அந்த உடலின் நுண்ணிய புலன்களை வாசஸனையோடு (பழக்க வழக்கங்களை) எடுத்துச் செல்கிறான். மறுபிறவியில் அந்த நுண்புலனின் வாஸனையுடனே பிறக்கிறான்; குழந்தை பிறந்த உடனே தேனை அதன் நாக்கில் தடவினால், ருசியுடன் நக்குகிறது; விளக்கெண்ணையைத் தடவினால் அழுகிறது. (இது பூர்வஜன்ம வாசனைக்கு எடுத்துத் காட்டு).