ஸ்ரீ பகவான் உவாச:-
அபயம் ஸத்வஸம்சுத்திர் ஞானயோக வ்யவஸ்திதி: |
தானம் தமஸ்ச யஜ்ஞஸ்ச ஸ்வாத்யாயஸ்தப ஆர்ஜவம் || 16.1
கண்ணன் கூறியது.
அஞ்சாமை, மனத்தூய்மை, ஜ்ஞானத்திலும் யோகத்திலும் நிலைத்திருத்தல், ஈகை, ஸத் பாத்திரத்தில் புண்ய காலத்தில் தானம் செய்தல், புலனடக்குதல், யாகம், வேதம் ஓதுதல், தபஸ், நேர்மை:- பிறருக்குத் தீங்கிழையாமை, உண்மையே பேசுதல், கோபத்தை அடக்குதல், துறவு, அமைதி, கோள் சொல்லாமை, எல்லா உயிர்களிடத்தும் இரக்கம், பிறர் பொருளை விரும்பாமை, இனிமையாகப் பேசுதல், நாணம், மனம் சலியாமை;- தைரியம், பொறுமை, மனவுறுதி, தூய்மை, வஞ்சகமில்லாமை, செருக்கின்மை, இவைகள் எல்லாம் தெய்வ சம்பத்துடன், பிறந்தவனுக்கு இயல்பாக உள்ள குணங்கள்.