பகவத் கீதை வெண்பா

பத்தாம் அத்யாயம்- விபூதியோகம்

அததியாயப் பொருளின் சுருக்கம்

அண்ண லுலகி லனைத்துந்தா னாய்நின்ற
வணணம் விரித்துரைத்த வண்மையினைத்- திண்ணமாங்
கனபுறவே யோங்க வருள்கீதை பத்தாமோத்
தின்புறவே யோது மெடுத்து.        10.0

அண்ணல்

ஸ்வாமியான கண்ணன்

திண்ணம்

உறுதியாக

ஆங்கு

போர்க்களத்திலே

அன்புறவே

அன்புடன்

ஓங்க அருள் கீதை

உலகெங்கும் பரவ அருளிய கீதையின்

பத்தாம் ஓத்து

பத்தாவது அத்தியாயம்

உலகில் அனைத்தும்

உலகிலுள்ள எல்லாப் பொருள்களும்

தானாய நின்ற வண்ணம்

தனக்கு அதீனமாய நின்ற ப்ரகாரத்தை

(அண்ணல்) விரித்து உரைத்த வண்மையினை

(கண்ணன்) விரிவாகக் கூறிய வள்ளல் தன்மையை

இன்புறவே

(அனைவரும்) ஆனந்தமடையும்படியாக

எடுத்து ஓதும்

விளங்கும்படி கூறும்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top