பகவத் கீதை வெண்பா

முன்னமுகந் தென்னை முகஞ்செய்து கேட்டவுனக்
கின்னமுமென் மேன்மை யியம் புவன்கேள் – உன்னதிதம்
வேண்டியுரை செய்யுமென்றன் மிக்கவுரை வெல்புயத்தா
யீண்டியன்று கேண்மையவற் றிங்கு.        10.1

வெல்புயத்தாய!

வெற்றியைத்தரும் கைகளையுடையவனே!

முன்னம் உகந்து

கேட்பதற்கு முன்னமே உகப்படைந்து

என்னை

என்னிடம்,

முகம் செய்து கேட்ட உனக்கு

முகங்கொடுத்துக் கேட்ட உனக்கு

உன்னது இதம் வேண்டி

(என் விஷயமான பக்தி உண்டாவதும் வளருவதுமாகிற) உனது நன்மையின் பொருட்டு

இன்னமும்

மறுபடியும்

என் மேன்மை இயம்புவன் கேள்

என்னுடைய பெருமையைச் சொல்லுகிறேன் கேட்பாயாக (எப்படிக் கேட்பது? எனில்)

இங்கு உரை செய்யும் என்றன

போர்க்களத்தில் உபதேஶிக்கும் என்னுடைய மிக்க உரை

மேலான வார்த்தையை

ஈண்டு இயன்று

இவ்விஷயத்தில் கவனமுள்ளவனாய்

மையல் அற்று

மயக்கம் அற்றவனாய்

கேள்

கேட்பாயாக

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top