பகவத் கீதை வெண்பா என்றுமெனைக் கூடு மியல்வினரா யென்னுகந்து நின்றுமிகச் சேவித்து நேர்படுவார்க் – கொன்றியசீர்ப் பத்தியோ கத்திற் பயின்றே யெனையடையும் புத்தியோ கங்கொடுப்பன் பூண்டு. 10.10 என்றும் எனைக் கூடும் இயல்வினராய் எப்போதும் என்னிடம் சர்ர்திருக்கையை விரும்புகிறவர்களாய் என்னுகந்துநின்று மிகச்சேவித்து நேர்படுவார்க்கு என்னிடம் ஸ்வயம் ப்ரயோஜந பக்தியை மிகவும் செய்யும் அவர்களுக்கு ஒன்றிய சீர் பத்தியோகத்தில் பயின்றே (பயன் கருதாமல்) என் குணங்களிலேயே பொருந்தி அனுபவிக்கையாகிற பக்தியோகத்தில் நீண்டநாள் பழகி எனை அடையும் புத்தியோகம் என்னை அடைவதற்கு உறுப்பான (பரஜ்ஞாநமாகிற) புத்தியின் சேர்த்தியை பூண்டு கொடுப்பன் அன்பு பூண்டு கொடுப்பேன். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0