பகவத் கீதை வெண்பா

மாய னிசைத்த வளர்பெருமை கேட்டதின்னே
யாய விசைய னதுவிரும்பி – யேயவன்பான்
மிக்க பெருமை விரித்தறிய வேண்டியே
தக்க பரிசுரைத்தான் றான்.      10.12

இன்னே ஆய விசையன் தான்

இத்தகையவனான அர்ஜுனன்

மாயன் இசைத்த வளர் பெருமை அது கேட்டு

மாயனாகிற கண்ணன் பாடிய அவனுடைய வளராநிற்கும் அந்த வைபவத்தைக்கேட்டு

அது விரும்பி

அதை விரும்பி

ஏய அன்பால்

பொருந்திய அன்பால்

மிக்க பெருமை

அக்கண்ணனுடைய மிகுந்த பெருமையை

விரித்து அறிய வேண்டியே

விரிவாக அறியவேண்டியே

தக்க பரிசு உரைத்தான்

தகுந்த வார்த்தைகளைக் கூறினான்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top