பகவத் கீதை வெண்பா

ஏய்ந்தென் பெருமை யிமையோ ரெழின்முனிவ
ராய்ந்தங் கிறையு மவரறியார் – வாய்ந்தியலுஞ்
சாதிசர் பூதங்க ளுக்குந் தவத்தோர்க்கு
மாதிநான் யார்க்கு மமைந்து.        10.2

அவர்

அறிய ஒண்ணாத பெருமைகளையுடைய

இமையோர்

தேவர்களும்

எழில் முனிவர்

ஜஞானத்தில் அழகு பெற்ற முனிவர்களும்

என் பெருமை

என்னுடைய சிறப்பை

ஏய்ந்து

பொருந்தி நின்று

ஆய்ந்து

ஆராய்ந்து

அங்கு இறையும்

அதில் சிறிதும்

அறியார்

அறியமாட்டார்கள்

வாயந்து இயலும் சாதிசேர் பூதங்களுக்கும்

(இந்த லீலாவிபூதியில் பொருந்திவாழும் நாலுவகை யோனிகளுள் உயர்ந்தஜாதியைச் சேர்ந்த சேதனரான தேவர்களுக்கும்

தவத்தோர்க்கும்

மஹரிஷிகளுக்கும்

யார்க்கும்

பெருமை பெற்ற மற்றவர்களுக்கும்

அமைந்து

பொருத்தமான

ஆதி

காரணமாயிருப்பவனன்றோ

நான்

நான்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top