பகவத் கீதை வெண்பா

சலம்பயில்வார் சூதுநான் சாயாத தேசி
னலம்பயில்வார் தேசதுவு நானே – வலஞ்செய்
சயமுந் துணிவுநான் றம்மனத்துத் திண்மை
யியலுமவர்க் காங்கதுவும் யான்.         10.37

சலம்பயில்வார்

வஞ்சனை புரிபவர்களுடைய வஞ்சனைச் செயல்களுக்கு இருப்பிடமானவற்றுள்,

சூது நான்

சூதாட்டம் நானே

சாயாத தேசின் நலம் பயில்வார்

அழியாத தேஜஸ்ஸாகிற சிறப்பைப் பெற்றவர்களுடைய

தேசு அதுவும் நானே

அந்தத் தேஜஸ்ஸும் நானே

வலம் செய் சயமும்

(வெற்றிகொள்பவர்களுடைய) பலத்தினால் ஏற்படும் வெற்றியும்

துணிவும்

(துணிவுடையவர்களுடைய) உறுதியும்

நான்

நானே

தம் மனத்து திண்மை இயலுமவர்க்கு

தம் மனத்தில் வலிமை உடையவர்களுக்கு

ஆங்கு அதுவும் யான்

அந்த மனவலிமையும் நானே.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top