பகவத் கீதை வெண்பா பன்முகத்து நாகத்துப் பண்பா ரனந்தனான்றொன்முகத்துக் கோவருணன் றோயத்தார்க்- கின்முகத்திலான பிதுக்கட் கரியமா தண்டிப்பார்க்கூன மறயமனா முற்று. 10.30 பல முகத்து நாகத்து பலதலைகளையுடைய பாம்புகளுக்குள் பண்பு ஆர் பகவச்சேஷத்வம் நிறைந்த அனந்தன் நான் ஆதிஶேஷன் நானே தோயத்தார்க்கு ஜலவாஸிகளுக்குள் தொல் முகத்து கோ வருணன் அநாதி காலமாக முக்யத்வத்தையுடைய கடலரசனான வருணன் நானே இன் முகத்தில் ஆன பிதுக்கட்கு இனிய முகத்தையுடைய பித்ருக்களுக்குள் அரியமா அரியமா நானே ஊனமற முற்று தண்டிப்பார்க்கு பக்ஷபாதமில்லாமல் அனைவரையும் தண்டிப்பவர்களுக்குள் யமனாம் நான் யமனாகிறேன் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0