பகவத் கீதை வெண்பா கண்பாரா தெல்லாங் கவர்நதுண்ணுங் கூற்றநா னொண்பாங்கி லாமவற்றுக் குற்பவநான் – பெண்பாலில் காத்திதிரு வாக்குக் கிளர்நினைவு மேதையுடன் சீர்த்திருதி நான்பொறைநான் றேர். 10.35 கண்பாராது இரக்கமில்லாமல், எல்லாம் கவர்ந்து உண்ணும் கூற்றம் எல்லாவுயிர்களையும கவர்ந்து கைக்கொள்ளும் ம்ருத்யுவும் நானே, ஒண் பாங்கில் ஆமவற்றுக்கு அழகிய அமைப்புடன் உண்டாகின்ற பொருள்களுக்கு, உற்பவம் உத்பத்திக்ரியை, நான் நான் பெண் பாலில் ஸத்ரீகளுள், திரு ஸ்ரீதேவியும், கீர்த்தி கீர்த்தி தேவியும், வாக்கு வாக்தேவியும், கிளர் நினைவு கிளர்ந்தெழும் நினைவுக்கு அபிமாநிநியான ஸ்ம்ருதிதேவியும், மேதையுடன் மேதாதேவியும், சீர் திருதி சீர்மைமிக்க த்ருதிதேவியும், நான் நானே. பொறை பொறுமைக்கு அபிமாநிநியான க்ஷமை எனப்படும் பூதேவியும், நான் நானே. தேர் (இதனைத்) தெரிந்து கொள்வாயாக. Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0