பகவத் கீதை வெண்பா

பதினோராம் அத்தியாயம் - விசுவரூபதர்சனம்

அத்தியாயப் பொருளின் சுருக்கம் 

பார்த்தனுக்கு மாயனருள் கீதைப் பதினொன்றா
மோத்திவ வுலகெல்லா முடம்பதனிற் – கோத்தபடி
காட்டுமது தன்னறிவு கண்டடைத் றன்பத்தி
கூட்டுமதுஞ் சொல்லுங் குறித்து.       11.0

மாயப் பார்த்தனுக்கு

அர்ஜுனனுக்கு

மாயன் அருள்

மாயப்பிரானாகிய கண்ணன் அருளிய

கீதை பதினொன்றாம் ஓத்து

கீதையின் பதினொன்றாம் அத்தியாயம்

இவ்வுலகெல்லாம்

இவ்வுலகனைத்தையும்

உடம்பதனில்

தன் சரீரத்தில்

கோத்த படி காட்டுமது

(கண்ணன் ஒரு பகுதியாகக் ) கோத்துக் கொண்டிருக்கும்படியைக் காட்டுவதாகும்

தன் அறிவு கண்டு அடைதல்

தன்னை அறிவதும், காண்பதும், அடைவதுமாகிற பயன்களை

தன்பத்தி கூட்டுமதும்

தன் விஷயமான பக்தியோகம் கூட்டிவைப்பதையும்

குறித்துச் சொல்லும்

குறிக்கொண்டு கூறும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top