பகவத் கீதை வெண்பா

அவ்விடத்தி லப்பொழுது பார்த்த னனைத்துலகு
மெவ்வுறுப்பும் வேறா யிருக்கின்ற – விவ்வகையே
தேவதே வன்றன் றிருவுருவி லோரிடத்தே
யாவதெனக் கண்டா னவன்.      11.14

அவ்விடத்தில் தேவதேவன் தன் திருவுருவில்

அவ்விடத்தில் காட்சியளித்த தேவதேவனுடைய திருமேனியில்,

எவ்வுறுப்பும் வேறாயிருக்கின்ற இவ்வகையே

ஒவ்வொரு அவயவமும் வெவ்வேறாகப் பிரிந்திருக்கின்ற இம்முறையில்,

உலகு அனைத்தும்

எல்லா உலகத்தையும்,

ஓரிடத்தே ஆவது என

ஒரு பகுதியிலிருப்பதாக,

பார்த்தன் அவன்

(திவ்யமான கண்ணைப்பெற்ற) அந்த அர்ஜுனன்,

அப்பொழுது கண்டான்

அப்பொழுதே பார்த்தான்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top