பகவத் கீதை வெண்பா

இவ்தச் சுரகணங்க ளெய்தியிடு மீங்குன்னைச்
சிந்தைப் பயத்தாற சிலர்தொழுது – வந்துரைப்பர்
நன்முனிவர் சித்தரெல்லா நன்றாக வென்றுரைத்து
முன்னைவரத தாற்றுதிப்பர் மூண்டு.        11.22

இந்த சுரகணங்கள்

இந்த தேவர் கூட்டங்கள்

ஈங்கு உன்னை எய்தியிடும்

இங்கு உனது அருகில் வருகிறார்கள்

சிலர் சிந்தைப் பயத்தால்

இவர்களிலேயே சிலர் நெஞ்சில் பயத்தாலே

தொழுது வந்து

கைகூப்பி நின்று

உன்னை உரைப்பர்

(தங்களது அறிவுக்குத் தக்கவாறு) உன்னைத் துதிப்பார்கள்

நன் முனிவர் சித்தர் எல்லாம்

நல்ல முனிவர் கூட்டங்களும், ஸித்தர், கூட்டங்களும்

'நன்று ஆக' என்று உரைத்து

‘மங்களம் உணடாகட்டும் ' என்று கூறி

முன்னை வரத்தால்

தமது பூர்வபுண்யத்தாலே

மூண்டு துதிப்பர்

உனக்குப் பொருத்தமான நிறைந்த துதிகளாலே துதிக்கிறார்கள்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top