பகவத் கீதை வெண்பா மேலா மெயிற்றான் மிகுபயமா முன்முகங்கள் காலா னலன்போலே கண்டேனான் – மாலாகித்திக்கறியே னின்பமுறேன் றேவேசா விச்சகத்துத் தக்கவிருப் பேயருணீ தான். 11.26 தேவேசா! தேவர் தலைவனே! இச்சகத்துத் தக்க இருப்பே இந்த உலகத்திற்குப் பொருத்தமான இருப்பிடமே! மேலாம் எயிற்றால் உறுதியான பற்களால் காலா நலன் போலே ஊழிக்காலத்தீயைப் போலே மிகு பயமாம் மிகுந்த பயங்கரமாயிருக்கும் உன முகங்கள் உனது முகங்களை, கண்டே நான் காண்பதாலேயே நான் மாலாகி மயங்கி திக்கு அறியேன் திக்குகளை அறிகின்றேன் அல்லேன் இன்பமும் உறேன் ஸுகத்தையும் அடைகிறேன் அல்லேன் நீ தான் அருள் நீயே உகந்தருளவேணும் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0