பகவத் கீதை வெண்பா மேவுவிளை யாட்டில் விகாரங் கிடையிருப்பூண்ஓவுதலுற் றுன்னோ டுடன் கூடித் – தேவனேயுன்னைத் தனியிற் றிரளி லுயர்வழித்தல்தன்னைப் பொறுப்பிப்பன் தாழ்ந்து. 11.43 உன் பெருமை தன்னை உன்னுடைய பெருமையை உணராதே அறியாமல் தோழனேன் உனக்கு நண்பன் என்பதையே கருதி அன்பதனால் முன்பயிலும் நெஞ்சால் அன்போடு நீண்டநாள் பழகிய நெஞ்சாலும் மோகம் தன்னாலே மயக்கத்தாலும் முயன்று முயற்சி செய்து முனிந்து கோபித்து நான் நான் ஏ கண்ணா! ஏ கண்ணனே! ஏ தோழா! ஏ யாதவா! என்பன ஏ தோழனே! ஏ யாதவனே! என்று கூறுவேன் தேவனே பரமாத்மாவே! விகாரம் மேவு விளையாட்டில் இங்குமங்கும் ஸஞ்சரிக்கும் விளையாட்டுக்களிலும் கிடை படுத்திருக்கும் போதும் இருப்பு வீற்றிருக்கும் போதும் ஊண் உண்ணும் போதும் உன்னோடு உடன்கூடி ஓவுதல் உற்று உன்னோடு கூடிச் சேர்ந்திருக்கும் போதும் தனியில் தனியே இருக்கும் போதும் திரளில் பிறரோடு கூடியிருக்கும்போதும் உன்னை உயர்வழித்தல் தன்னை உன்னை அவமதித்ததை தாழ்ந்து பொறுப்பிப்பன் அடிவணங்கி மன்னிப்பு வேண்டுகிறேன் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0