பகவத் கீதை வெண்பா உன்னுடைய விக்கண்ணா லொன்றுமெனைக் காண்பரிதாமென்னுமது தன்னாலே யானுனக்கு – மன்னியசீர்த் திவ்வியமாங்கண்டருகேன் சீர்பிறங்கு மென்பெருமைசெவ்வியுறக் காணதனாற் சேர்ந்து. 11.9 உன்னுடைய இக்கண்ணால் உனது இந்த ப்ராக்ருதமான கண்ணால், எனை ஒன்றும் காண்பு அரிதாம் என்னை ஒரு சிறிதும் காண இயலாது, என்னுமது தன்னாலே இக்காரணத்தாலே, யான் நான், உனக்கு உனக்கு, மன்னிய சீர் திவ்வியமாம் கண் தருகேன் குணம் பொருந்திய அப்ராக்ருதமான கண்ணைத் தருகிறேன், அதனால் சேர்ந்து அக்கண்ணைக்கொண்டு, சீர் பிறங்கும் என் பெருமை குணவிபூதிச் சேர்த்தியோடு கூடிய எனது பெருமையை, செவ்வியுற காண் நன்கு காண்பாயாக. Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0