பகவத் கீதை வெண்பா தேவாவுன் மேனியினிற் றேவரையுஞ் சங்கமாய் மேவாரும் பூதங்கள் வேற்றுமையும் – பூவார் பிரமனவன் பாலீசன் பேர்முனிவர் தேசா ருரகரையெல் லாங்காண்ப னுற்று. 11.16 தேவா தேவனே! உன்மேனியில் உனது விஶ்வரூபத்தில், தேவரையும் (எல்லா) தேவர்களையும், சங்கமாய் மேவு ஆரும் பூதங்கள் வேற்றுமையும் கூட்டங் கூட்டமாகப் பொருந்தி நிற்கும் பிராணிகளின் வகைகளையும், பூவார் பிரமன் உந்தித்தாமரையில் வாழும் பிரமனையும், அவன்பால் ஈசன் அவனுக்கு அடங்கிநிற்கும் சிவனையும், பேர் முனிவர் புகழ்பெற்ற முனிவர்களையும், தேசு ஆர் உரகரை எல்லாம் ஒளிவீசும் பாம்புகள் அனைத்தையும், உற்று காண்பன் நன்கு காண்கிறேன் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0