பகவத் கீதை வெண்பா மிக்கவொளி ராசியாய் மீதெங்குந் தேசமர்ந்து பக்கமுறக் காண்பரிதாய்ப் பார்ப்பனான் – றொக்கவன லர்க்கனொளி மிக்களவற் றாங்குமுடி நேமிகதை யொற்கமற மேவுமுனை யுற்று. 11.18 மிக்க ஒளி ராசியாய் பேரொளிக்குவியலாயிருப்பவனாய், எங்கும் மீது தேசு அமர்ந்து எல்லாப்புறத்திலும் பேரொளியுடையவனாய், பக்கம் உற காண்பு அரிதாய் ஒவ்வொரு அவயவமும் காண்பதற்கு அரியவனாய், தொக்க அனல் அர்க்கன் ஒளிமிக்கு கொழுந்துவிட்டெரியும் அக்னியைப் போலவும் ஸூர்யனைப்போலவும், கிரணங்களையுடையவனாய், அளவற்று அளவற்றவனாய் உள்ள, உனை உன்னை, ஆங்கு விஶ்வரூபம் காண்பதற்கு முன்போலவே, முடி நேமி கதை ஒற்கம் அற மேவும் உனை கிரீடம், சக்ரம், கதை ஆகியவை குறைவறச் சேர்ந்திருக்கின்றவனாக, நான் நான், உற்று பார்ப்பன் நன்கு காண்கிறேன். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0