பகவத் கீதை வெண்பா ஓங்கி யெரிமுகத்தி லோடியே விட்டிலெல்லா மாங்கு விழுமா றதுபோல – வீங்குலக முன்முகங்க டனனிடையி லுற்றே விழுங்கண்டாய தன்முகஞ்செய் நாசத்தைச் சார்ந்து. 11.30 விட்டில் எல்லாம் விட்டில்கள் அனைத்தும் ஓங்கி எரி முகத்தில் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பை நோக்கி ஓடியே ஆங்கு ஓடிச்சென்று அதிலேயே விழுமாறு அதுபோல விழுகின்றதுபோலே ஈங்கு இப்போர்க்களத்தில் உலகம் ராஜலோகவீரர்கள் தன்முகம்செய் நாசத்தை சார்ந்து தமது அழிவைத்தேடி உன் முகங்கள் தன் இடையில் உற்றே உன் வாய்களுக்கு நடுவிலே நுழைந்து விழும் கண்டாய் விழுகிறார்கள் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0