பகவத் கீதை வெண்பா இக்கொடிய ரூபா வெவனீ யெனக்கியம்பாய்தக்குனக்கு நான்பணிந்தேன் றண்ணளிசெய் – மிக்கமுதலானவுனை யிச்சிப்ப னாய்ந்தறிவான் றேவவராநானறியே னுனசெய்தி நன்கு. 11.32 தேவவரா! தேவர்களில் தலைசிறந்தவனே! இக்கொடிய ரூபா! இத்தகைய கொடுமையான உருவத்தை உடையவனே! நீ எவன் நீ என்ன செய்ய விரும்புகிறாய் (என்று) மிக்க முதலான உனை ஆதி காரணமான உன்னை ஆய்ந்து அறிவான் இச்சிப்பன் ஆராய்ந்து அறிந்துகொள்ள விரும்புகிறேன் உன் செய்தி நீ செய்யவிரும்புவதைப் பற்றி நான் நன்கு அறியேன் நான தெளிவாக அறிகின்றேனல்லேன் எனக்கு இயம்பாய் எனக்கு அதைச் சொல்லுவாயாக உனக்கு நான் தக்கு பணிந்தேன் உனக்கு நான் தக்கபடி வணங்கினேன் தண்ணளிசெய் அருள் புரிவாயாக Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0