பகவத் கீதை வெண்பா

தேரார் துரோணன் செயத்திரதன் காங்கேய
னேரார் கன்னனுமற் றிங்கிகலிற் -பேராளர்
யான்செகுத்தார் தம்மை யிகற்செகுத்துத் துன்பெய்தேல்
தான்செயித்தி யொன்னாரைச் சாய்த்து.   11.35

தேரார்

தேரில் வீற்றிருக்கும்

துரோணன்

துரோணன்,

செயத்திரதன்

ஜயத்ரதன்

காங்கேயன்

கங்காபுத்திரனான பீஷ்மன்

ஏர் ஆர் கன்னனும்

சிறப்புமிக்க கர்ணன்

மற்றும்

மேலும்

யான் செகுத்தார்

(ஏற்கனவே) என்னால் கொல்ல நிச்சயிக்கப்பெற்ற

இங்கு இகலில் பேராளர் தம்மை

இங்குள்ள போர்த்தலைவர்கள் அனைவரையும்

இகல் செகுத்து

போரில் கொன்று,

துன்பு எய்தேல்

துன்பம் அடையாமல் இரு

ஒன்னாரை தான் சாய்த்து

எதிரிகளை

செயித்தி

வெற்றியை அடைவாய்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top