பகவத் கீதை வெண்பா நீசொன்ன வண்ண நிகரில் பரமேசா மாசொன்றா வண்ண மருவியதே – தேசொன்று மேலா மிறையுருவை மெய்க்காண விச்சிப்பன் மாலே புருடோத்த மா. 11.4 நிகரில் பரமேசா ஒப்பற்ற பரமேஶ்வரனே! புருடோத்தமா மாலே புருஷோத்தமனான திருமாலே! நீ சொன்ன வண்ணம் நீ சொன்னபடியே, மாசு ஒன்றா வண்ணம் மருவியதே குறையில்லாதபடி பொருந்தியிருக்கிறது, தேசு ஒன்றும் அனைத்தையும் நியமிக்கை முதலான பெருமைகள் பொருந்திய, மேலாம் இறையுருவை மேலான இறைவனாகிற உன் உருவத்தை, மெய் காண இச்சிப்பன் நேரே காண விரும்புகிறேன். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0