பகவத் கீதை வெண்பா

வாயுநம னங்கி வருணன் சசாங்கன்றான்
ஆயுமுல காக்குவோ னங்கவனுக் – கேயுமுத
லானவுனக் காகநம வாயிரங்காற பின்பின்னு
நானமவுன் மேன்மே னலம்.   11.40

வாயு நமன் அங்கி

வாயுவாகவும், யமனாகவும், அக்னியாகவும்,

வருணன் சசாங்கன்தான்

வருணனாகவும், சந்திரனாகவும்

உலகு ஆக்குவோனாயும்

உலகைப்படைக்கும் (ப்ரஜாபதிகளாகவும், அவர்களுக்கும் தந்தையான) பிரமனாகவும் ஆகி

அங்கு அவனுக்கு ஏயும் முதலான உனக்கு

அத்தகைய பிரமனுக்கும் பொருந்திய தகப்பனான உனக்கு

நம ஆக

வணக்கம் ஆகுக.

ஆயிரங்கால (நம ஆக)

ஆயிரம் முறை வணக்கமாகுக.

பின்

பின்னும்

மறுபடியும்

மறுபடியும்

நான் உன்

நான் உனக்கு

மேன்மேல்

மேலேமேலே

நலம் நம

நல்ல வணக்கங்களைச் செய்கிறேன்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top