பகவத் கீதை வெண்பா ஓதுமறை வேள்வி யுரைதான மோர்கிரியைமீதுதவந் தன்னான் மிகவென்னைப் – பூதலத்துநின்னலரிங் கிவ்வாறு நேர்காண மாட்டார்காண்மன்ன! குரு வீரனே! மற்று. 11.49 மன்ன! அரசனே! குருவீரனே! குருகுலவீரனே! மற்று ஓதுமறை வேள்வி உரைதானம் ஓர் கிரியை மீது தவம் தன்னால் பக்தியில்லாமல் வேதத்தைக் (கேட்டு) ஓதுவதாலும், வேள்விகளைச் செய்வதாலும், (சிறப்பாகச்) சொல்லப்படும் தானங்களையும், ஒப்பற்ற கிரியைகளையும், கடுமையான தவங்களையும் செய்வதாலும் இங்கு பூதலத்து இப்பூவுலகில் நின்னலா உன்னைப் போன்ற பக்தியில்லாதவர்கள் இவ்வாறு நீ கண்டதுபோல என்னை மிக நேர் காணமாட்டார் காண் என்னைச் சிறப்பாக நேருக்குநேர் காணமாட்டார்கள் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0