பகவத் கீதை வெண்பா

இன்னே யிறைவ னியம்பி விசயனுக்குத்
தன்னே ருருமீண்டு தான்காட்டி – முன்னே நின்
றாற்றியவ னச்சங் கெடுத்தா னழகினாற்
றேற்றியெழின் மேனியுடன் சேர்ந்து.   11.51

இன்னே இறைவன்

இவ்வண்ணமாக கண்ணன்

விசயனுக்கு இயம்பி

அர்ஜுனனுக்குக் கூறி

தன் ஏர் உரு

தனது அழகிய உருவத்தை

தான் மீண்டு காட்டி

தானே மறுபடியும் காட்டி

எழில் மேனியுடன் சேர்ந்து முன்னே நின்று

அழகிய திருமேனியோடு கூடி அவனுக்கு முன்னே நின்று

அழகினால் தேற்றி

தன் அழகைக் காட்டி ஆறுதல் அளித்து

அவன் அச்சம் ஆற்றிக் கெடுத்தான்

அவனது பயத்தைப் (படிப்படியாகத்) தணித்துப் போக்கினான்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top